தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திறக்காத ஓய்வறை... அகலாத குப்பைக் கழிவு!

திறக்காத ஓய்வறை... அகலாத குப்பைக் கழிவு!

திறக்காத ஓய்வறை... அகலாத குப்பைக் கழிவு!


ADDED : செப் 13, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திறப்பது எப்போது

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் இரண்டாவது பிளாட்பார்மில் உள்ள ஏ.சி. ஓய்வறை அவ்வப்போது பூட்டப்பட்டு விடுகிறது. பயணிகள் சிரமப்படுகின்றனர்.

– ராமராஜன், குமரன் ரோடு. (படம் உண்டு)

திறந்த வெளியில்

பிளாஸ்டிக் கழிவு

திருமுருகன்பூண்டி ரிங்ரோடு, பொங்குபாளையம், கூட்டுறவு நகரில் திறந்த வெளியில் பிளாஸ்டிக் கழிவுகள் வீசியெறியப்படுகிறது.

– விஜி, கூட்டுறவு நகர் (படம் உண்டு)

இப்படி செய்யலாமா?

திருப்பூர், அவிநாசி ரோடு, கலெக்டர் அலுவலகம் முன்புறம் இருக்கும் தார் ரோட்டின் மேல் மீண்டும் தார் ரோடு போட்டு நிதி வீணாடிக்கின்றனர்.

– தமிழ், அவிநாசிரோடு. (படம் உண்டு)

தெருவிளக்கு எரிவதில்லை

திருப்பூர், காங்கயம் ரோடு, பத்மினி கார்டனில் பத்து நாட்களாக தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.

– ராஜேந்திரன், பத்மினிகார்டன். (படம் உண்டு)

பெரியார் காலனி பஸ் ஸ்டாப், பாரதிநகர் முதல் வீதி, விநாயகர் கோவில் அருகே இரண்டு வாரமாக தெருவிளக்கு எரிவதில்லை.

– சிவா, பாரதிநகர். (படம் உண்டு)

குப்பை அள்ளுங்க...

மங்கலம் ரோடு, செங்குந்தபுரம் தெற்கு வீதியில் வழிநெடுக குப்பை நிறைந்துள்ளது. குப்பை அள்ள வேண்டும்.

– இளையராஜா, செங்குந்தபுரம். (படம் உண்டு)

திருப்பூர், சாராதா நகர், மசூதி மெயின் வீதியில் மாதக்கணக்கில் குப்பை எடுக்காமல் அப்படியே தேங்கியுள்ளது.

– முகமதுசையது, சாராதாநகர். (படம் உண்டு)

அங்கேரிபாளையம் ரோடு, பத்மாவதிபுரம் கிழக்கு வீதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும். குப்பை நிறைந்து இருப்பதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

– பழனிசாமி, பத்மாவதிபுரம். (படம் உண்டு)

கால்வாய் அடைப்பு

நல்லுார் – முத்தணம்பாளையம் ரோடு, சர்ச் அருகே வளைவில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.

– ரத்தினமூர்த்தி, முத்தணம்பாளையம். (படம் உண்டு)

காத்திருக்கு ஆபத்து

திருப்பூர், 30 வது வார்டு, ராமையாகாலனி கிழக்கு இரண்டாவது வீதியில் பழைய வேப்பமரம் போக்குவரத்து இடையூறாக எப்போது வேண்டுமானலும் விழும் நிலையில் உள்ளது.

– தேவி, ராமையா காலனி. (படம் உண்டு)

ரியாக் ஷன்

பளிச்சிடும் விளக்கு

திருப்பூர், 19 வது வார்டு, திருநீலகண்டபுரம் பஸ் ஸ்டாப் உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் இருந்தது. தினமலர் செய்தியால், புதிய உயர்கோபுர மின்விளக்கு பொருத்தப்பட்டு வெளிச்சமாக உள்ளது.

– ரஞ்சித், திருநீலகண்டபுரம். (படம் உண்டு)

தெருவிளக்கு ஓ.கே.

அவிநாசி, மங்கலம் ரோடு, ராயன் கோவில், ஐயப்பன் கோவில் வீதியில், தெருவிளக்கு இல்லை இருள்சூழ்ந்து இருப்பதாக தினமலர் செய்தியால், தெருவிளக்கு பொருத்தி விட்டனர்.

– ஜோதிமணி, வேலாயுதம்பாளையம். (படம் உண்டு)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us