sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குறையாத 'ரெப்போ ரேட்'; தொழில்துறை ஏமாற்றம்

/

குறையாத 'ரெப்போ ரேட்'; தொழில்துறை ஏமாற்றம்

குறையாத 'ரெப்போ ரேட்'; தொழில்துறை ஏமாற்றம்

குறையாத 'ரெப்போ ரேட்'; தொழில்துறை ஏமாற்றம்

ADDED : டிச 07, 2024 06:41 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:41 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், 'ரெப்போ ரேட்' குறைந்து வருவதால், இந்தியாவிலும், 50 புள்ளிகள் வரை 'ரெப்போ ரேட்' குறைக்க வேண்டுமென, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், நேற்று புதிய நிதிக்கொள்கையை வெளியிட்டார்; அதில், 'ரெப்போ ரேட்' விகிதம், 6.5 சதவீதம் என்ற அதே நிலையில் தொடரும் என்று அறிவித்துள்ளார். கடந்த, 22 மாதங்களாக, 'ரெப்போ ரேட்' மாறவில்லை; நேற்றைய, 11வது நிதிக்கொள்கை அறிவிப்பிலும், 6.5 சதவீதம் என்ற நிலையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய கால மற்றும் நீண்ட கால தொழிற்கடன், வீட்டுக்கடன் என, எவ்வகை கடனாக இருந்தாலும், 'ரெப்போ ரேட்' அடிப்படையில், கடனுக்கு வட்டி நிர்ணயம் செய்யப்படும். கடந்த காலங்களில், 'ரெப்போ ரேட்' உயர்ந்த போது, உடனுக்குடன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. குறைய வாய்ப்பிருந்தும், இம்முறையும் குறைக்கவில்லை.

வீட்டுக்கடன் பெறும் போது, 7 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த வட்டி விகிதம், தற்போது, 10 சதவீதத்தை நெருங்கிவிட்டது. இதனால், 'அரியர்' என்ற பெயரில், வீட்டுக்கடன் மீது பெரிய தொகை செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதேபோல், கூடுதல் வட்டி செலுத்த வேண்டிய நிர்பந்தம் தொழில்துறையினருக்கும் ஏற்பட்டது.

கடந்த, 22 மாதங்களாக, 'ரெப்போ ரேட்' விகிதம் உயராமல் இருப்பதால், ஒருபுறம் நிம்மதியாக இருந்தாலும், வட்டி விகிதம் குறைய ஏதுவாக, வாய்ப்பு இருந்தும், 'ரெப்போ ரேட்'டை குறைக்காதது தொழில்துறையினர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர், டிச. 7-

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், 'ரெப்போ ரேட்' குறைந்து வருவதால், இந்தியாவிலும், 50 புள்ளிகள் வரை 'ரெப்போ ரேட்' குறைக்க வேண்டுமென, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், நேற்று புதிய நிதிக்கொள்கையை வெளியிட்டார்; அதில், 'ரெப்போ ரேட்' விகிதம், 6.5 சதவீதம் என்ற அதே நிலையில் தொடரும் என்று அறிவித்துள்ளார். கடந்த, 22 மாதங்களாக, 'ரெப்போ ரேட்' மாறவில்லை; நேற்றைய, 11வது நிதிக்கொள்கை அறிவிப்பிலும், 6.5 சதவீதம் என்ற நிலையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய கால மற்றும் நீண்ட கால தொழிற்கடன், வீட்டுக்கடன் என, எவ்வகை கடனாக இருந்தாலும், 'ரெப்போ ரேட்' அடிப்படையில், கடனுக்கு வட்டி நிர்ணயம் செய்யப்படும். கடந்த காலங்களில், 'ரெப்போ ரேட்' உயர்ந்த போது, உடனுக்குடன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. குறைய வாய்ப்பிருந்தும், இம்முறையும் குறைக்கவில்லை.

வீட்டுக்கடன் பெறும் போது, 7 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த வட்டி விகிதம், தற்போது, 10 சதவீதத்தை நெருங்கிவிட்டது. இதனால், 'அரியர்' என்ற பெயரில், வீட்டுக்கடன் மீது பெரிய தொகை செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதேபோல், கூடுதல் வட்டி செலுத்த வேண்டிய நிர்பந்தம் தொழில்துறையினருக்கும் ஏற்பட்டது.

கடந்த, 22 மாதங்களாக, 'ரெப்போ ரேட்' விகிதம் உயராமல் இருப்பதால், ஒருபுறம் நிம்மதியாக இருந்தாலும், வட்டி விகிதம் குறைய ஏதுவாக, வாய்ப்பு இருந்தும், 'ரெப்போ ரேட்'டை குறைக்காதது தொழில்துறையினர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலீட்டுச் செலவுகுறையாது

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 'ரெப்போ ரேட்' என்பது, 4.5 சதவீதமாக இருந்தது; படிப்படியாக குறைந்து, 6.5 சதவீதமாக உயர்ந்தது. கடந்த 20 மாதங்களுக்கு மேல், அதேநிலையில் இருக்கிறது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறி, 'ரெப்போ ரேட்' குறைக்கப்படவில்லை.

'ரெப்போ ரேட்' குறைந்திருந்தால், பின்னலாடை தொழிலுக்கு தேவையான புதிய தொழிலாளர்களை நியமித்திருக்கலாம்; புதிய தொழில்நுட்பத்துக்கு மாற உதவியாக இருக்கும். முதலீட்டு செலவு குறைய, வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும்.

- சரண்ராஜ், துணைத்தலைவர், இளம் ஏற்றுமதியாளர்கள் பிரிவு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்.

கடன் வாங்குவதும் சிரமம்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், 'ரெப்போ ரேட்' குறைக்கப்பட்டு வருகிறது; அதிகபட்சமாக, அமெரிக்காவில், 1 சதவீதம் வரை குறைந்துள்ளது. கடந்த செப்., மாதத்திலேயே, 50 புள்ளிகள் குறையும் என, எதிர்பார்த்திருந்தோம். இருப்பினும், மத்திய ரிசர்வ் வங்கி குறைக்கவில்லை. இம்மாதமும் ஏமாற்றமாக இருக்கிறது.

வங்கிகளும் 'ரெப்போ ரேட்' குறையுமென காத்திருந்தன; 'ரெப்போ ரேட்' குறைந்தால் மட்டுமே, புதிய மெஷின் வாங்குவது, நீண்டகால மற்றும் குறுகிய கால கடன் வாங்குவது எளிதாகும். தொழில்களுக்கான முதலீட்டு செலவுகளுக்கும் எளிதாக இருக்கும். எனவே, மத்திய ரிசர்வ் வங்கி, அடுத்த முறையாவது, 'ரெப்போ ரேட்' 50 புள்ளிகள் குறைக்க வேண்டும்.

- இளங்கோ, தலைவர், திருப்பூர் கிளை, இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,)

'ரெப்போ ரேட்' என்றால் என்ன?

நாட்டின் பொருளாதார சரிவு மற்றும் பண வீக்கம் போன்ற பாதிப்புகளில் இருந்து தடுக்க, மத்திய ரிசர்வ் வங்கி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நிதி கொள்கையை நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக, 'ரெப்போ ரேட்' மற்றும் 'ரிசர்வ் ரெப்போ ரேட்' விகிதத்தை நிர்ணயிக்கிறது.

பண வீக்கம் மற்றும் பணத்தட்டுப்பாடு போன்ற நிலை வராமல் காக்க, மத்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கடன் வழங்குகிறது. அதற்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதமே, 'ரெப்போ ரேட்' எனப்படுகிறது. 'ரெப்போ ரேட்' அதிகமானால், ஒவ்வொரு வங்கிகளும், தங்களது வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்.

முன்னணி வங்கிகள், தங்கள் உபரி நிதியை, பாதுகாப்பு நலன் கருதி, மத்திய ரிசர்வ் வங்கியில் டிபாசிட் செய்கிறது; அதற்கு வழங்கும் வட் டியே, 'ரிவர்ஸ் ரெப்போ ரேட்'. 'ரெப்போ ரேட்' நிர்ணயம் என்பது, காலாண்டு நிதிக்கொள்கையாக வெளியிடப்பட்டது; தற்போது, இருமாத இடைவெளியில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

      Dinamalar
      Follow us