/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுகாதாரமற்ற உணவகங்கள் ரூ.23 ஆயிரம் அபராதம் விதிப்பு
/
சுகாதாரமற்ற உணவகங்கள் ரூ.23 ஆயிரம் அபராதம் விதிப்பு
சுகாதாரமற்ற உணவகங்கள் ரூ.23 ஆயிரம் அபராதம் விதிப்பு
சுகாதாரமற்ற உணவகங்கள் ரூ.23 ஆயிரம் அபராதம் விதிப்பு
ADDED : செப் 27, 2024 12:29 AM

திருப்பூர் : சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட 23 உணவகங்களுக்கு, தலா ஆயிரம் ரூபாய், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அலுவலர் குழுவினர், கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் உள்ள அசைவ உணவகங்களில் ஆய்வு நடத்திவருகின்றனர்.
அசைவ உணவகங்கள், பிரியாணி கடைகள், தள்ளுவண்டி கடைகள் 148 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த, 23 கடைகளுக்கு, தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 20 பிரியாணி கடைகளில் உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல, நெகிழி பயன்பாட்டுக்காக, 12 கடைகளுக்கு, தலா இரண்டு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
உணவு பொருட்களை சுகாதாரமாகவும், தரமாகவும் தயாரித்து விற்பனை செய்யவேண்டும். அசைவ உணவு பொருள் தயாரிப்பு மூலப்பொருட்களை அன்றாட தேவைக்கு ஏற்ப வாங்கி பயன்படுத்தவேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது; ஒவ்வொருமுறையும் புதிய எண்ணெய் பயன்படுத்தவேண்டும்.
உணவு தயாரிப்பு இடம் மற்றும் விற்பனை செய்யும் இடங்கள் துாய்மையாக இருக்கவும், சுகாதாரமாகவும் இருக்கவேண்டும். உணவு தயாரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்த வேண்டும் என ஓட்டல், பேக்கரி, தள்ளுவண்டி உணவக உரிமையாளர் களுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் அறிவுறுத்தினர்.
பொதுமக்கள் உணவுப் பொருள் குறித்த புகார்களை, 94440 42322என்கிற எண்ணில் தெரிவிக்கலாம்.