ADDED : ஜன 26, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூமலுார் ஊராட்சி வலையபாளையம் பகுதியில் பி.ஏ.பி., வாய்க்கால் கடந்து செல்கிறது.
இதில் பூமலுார் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உள்ள வாய்க்கால், தரைப்பாலம் மற்றும் தடுப்பு சுவர் சேதமடைந்துள்ளது. கற்கள் ரோட்டில் பரவிக்கிடக்கிறது. பூமலுார் - வலையபாளையம் இடையே உள்ள ரோட்டை விசைத்தறிக் கூடங்கள், விவசாயத் தோட்டங்கள் சென்று வருவோர் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்த முடியாததால், கிடாத்துறை வழியாக 4 கி.மீ., துாரம் தேவையற்ற வகையில் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. வாய்க்காலை சீரமைத்து பொதுமக்கள் அவதிக்கு தீர்வு காண வேண்டும்.

