/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயன்படுத்த முடியாத கிராம நிழற்கூரைகள்
/
பயன்படுத்த முடியாத கிராம நிழற்கூரைகள்
ADDED : அக் 03, 2025 09:27 PM
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், சிதிலமடைந்துள்ள பயணியர் நிழற்கூரைகளை இடித்து அப்புறப்படுத்தி, புதிய நிழற்கூரை அமைக்க வேண்டும்.
உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்களில், 72 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், ஒன்றிய பொது நிதி, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், நிழற்கூரைகள் அமைக்கப்படுகின்றன.
தற்போது, பெரும்பாலான பயணியர் நிழற்கூரைகள் பயன்படுத்த முடியாமல் உள்ளன. சில நிழற்கூரைகள், மது அருந்தும் இடமாக மாறியுள்ளன.
மக்கள் கூறுகையில், 'சிதிலமடைந்துள்ள நிழற்கூரைகளை பயன்படுத்த முடியாமல் வெயிலிலும், மழையிலும் மக்கள் சிரமப்பட வேண்டியுள்ளது. அத்தகைய நிழற்கூரைகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். புதிய நிழற்கூரை அமைக்க ஒன்றிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்,' என்றனர்.