/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையை கடக்க தடுமாறும் மக்கள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
சாலையை கடக்க தடுமாறும் மக்கள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
சாலையை கடக்க தடுமாறும் மக்கள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
சாலையை கடக்க தடுமாறும் மக்கள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : அக் 03, 2025 09:23 PM

உடுமலை; பஸ் ஸ்டாண்ட் பகுதியில், சென்டர்மீடியனுக்கு இடையே தடுமாறியபடி, ஆபத்தான முறையில், மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் பிரச்னைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்ட்டில், கணியூர், தாராபுரம், திருப்பூர், செஞ்சேரிமலை ஆகிய வழித்தட பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற நுழைவாயில்கள் உள்ளன.
அனைத்து நுழைவாயில்களிலிருந்தும் வெளியேறும் மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து தான் பிற பகுதிகளுக்கு செல்ல முடியும்.
இவ்வாறு, நெடுஞ்சாலையை கடந்து செல்ல மக்களுக்காக, நடைமேம்பாலம் கட்டி நீண்ட காலமாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.
தற்போது, நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள சென்டர்மீடியனுக்கு இடையே ஆபத்தான முறையில் புகுந்து மறுபகுதிக்கு மக்கள் செல்கின்றனர்.
பஸ் மற்றும் இதர வாகனங்கள் நெடுஞ்சாலையில் வரும் போது, குறுகலான இடத்தில், மக்கள் நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டுநர்களும் திடீரென ரோட்டை கடக்கும் மக்களால் தடுமாறுகின்றனர்.
பஸ் ஸ்டாண்ட்டை ஒட்டி அமைக்கப்பட்ட நடைபாதையையும் அப்பகுதியிலுள்ள கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். எனவே, குறுகலான இடத்தில் தடுமாறியபடி செல்லும் மக்களும், பஸ் ஸ்டாண்ட் பகுதியை கடக்கும் வரை வாகன ஓட்டுநர்களும் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, நகராட்சி, போக்குவரத்து போலீஸ், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஆலோசனை கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, வாகன போக்குவரத்து அதிகமுள்ள நிலையில், ஆபத்தான முறையில் ரோட்டை கடக்கும் மக்கள்.