/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தேவையற்ற இலவசங்கள் கைவிட வேண்டும்'
/
'தேவையற்ற இலவசங்கள் கைவிட வேண்டும்'
ADDED : பிப் 08, 2025 06:31 AM
திருப்பூர்; வரும் மார்ச் 5ம் தேதி பொள்ளாச்சியில் ஒற்றைக் கருத்து வலியுறுத்தி கள் பருகும் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது:
வரும் மார்ச் 5ம் தேதி பொள்ளாச்சியில் ஒற்றை கருத்தை வலியுறுத்தி கள் பருகும் கருத்தரங்கம் நடைபெறுகிறது, இதில் கட்சி சார்பற்று அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார்.
நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யார் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். பீஹார் மாநிலத்தை போலவே தமிழகத்திலும் மதுவிலக்கு மற்றும் மது கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்.
மத்திய அரசும், மாநில அரசும் தேவையில்லாத இலவசங்களை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.