/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
யு.பி.ஐ., பரிவர்த்தனை ஆகஸ்டில் உச்சம்
/
யு.பி.ஐ., பரிவர்த்தனை ஆகஸ்டில் உச்சம்
ADDED : அக் 05, 2025 01:11 AM
திருப்பூர்:இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஆக., மாதம், 24.85 லட்சம் கோடி ரூபாய்க்கு, 2,001 கோடி எண்ணிக்கையிலான யு.பி.ஐ., பரிவர்த்தனை நடந்துள்ளது.
பண பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில், பல்வேறு டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் பயன்பாட்டில் உள்ளன. இதில், யு.பி.ஐ., முக்கியமானது. வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி., எனப்படும் பிரத்யேக குறியீட்டு எண் இல்லாமல், வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் வாயிலாக, யு.பி.ஐ., செயலிகள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
பெட்டிக்கடை துவங்கி ஸ்டார் ஹோட்டல்கள் வரை, 'கியூ.ஆர்.,' கோடு ஸ்கேன் செய்து எளிய வகையில் பரிவர்த்தனை செய்கின்றனர்.
திருப்பூர் ஆடிட்டர் அஸ்வின் அரசப்பன் கூறுகையில், ''அனைவரிடமும் வங்கி கணக்கு இருப்பதால், யு.பி.ஐ., பண பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படுகிறது. நம் நாட்டில், இதுவரை இல்லாத அளவுக்கு, ஆக., மாதம் யு.பி.ஐ., பரிவர்த்தனை, முதன்முறையாக, 2,001 கோடி என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. அம்மாதம், 24.85 லட்சம் கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. இது, முந்தைய ஆண்டு ஆக., மாதத்தை காட்டிலும், 34 சதவீதம் அதிகம். கடந்த ஆக., மாதம் மொத்தம் 24.85 லட்சம் கோடி ரூபாய்க்கு இதன் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.