ADDED : ஜன 03, 2026 06:02 AM
திருப்பூர்: தாராபுரத்திலுள்ள உப்பாறு அணை சார்ந்து, 6,100 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. வலது மற்றும் இடது கால்வாய் வாயிலாக பாசனம் பெறும் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்காக, இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. பயிர்களுக்காகவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும், இன்று (3ம் தேதி) முதல் வரும் 23ம் தேதி வரை, தகுந்த இடைவெளி விட்டு, தண்ணீர் திறக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது; 11 நாட்களுக்கு, மொத்தம் 173 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனால், தாராபுரம் தாலுகாவிலுள்ள, வேலாயுதம்பாளையம், தொப்பம்பட்டி, நஞ்சியம்பாளையம், கெத்தல்ரேவ், சூரிய நல்லுார், கண்ணன் கோவில், வரப்பாளையம், மடத்துக்குளம், வடுகபாளையம், சின்னப்புத்துார் கிராமங்களில், 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.

