/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் தேர்வு
/
யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் தேர்வு
ADDED : ஏப் 25, 2025 07:59 AM

குண்டடம் அருகேயுள்ள, வெருவேடம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்; இவரது மனைவி ராஜேஸ்வரி. விவசாயம் மேற்கொள்கின்றனர். இவர்களது மகள், மோகனதீபிகா, 23. கோவை, அவிநாசிலிங்கம் பள்ளியில் மேல்நிலைக்கல்வியையும், ரத்தினம் கல்லுாரியில், கல்லுாரி படிப்பையும் நிறைவு செய்துள்ளார். யு.பி.எஸ்.சி., தேர்வில் தேசிய அளவில், 617வது இடம் பெற்றார். இவரது தம்பி, செல்வதீபக், கோவையில் உள்ள கல்லுாரியில், பி.காம்., படித்து வருகிறார்.
மோகனதீபா கூறியதாவது:
பத்தாம் வகுப்பு படித்து முடிக்கும் போதே 'பச்சை இங்க்'கில் கையெழுத்திட வேண்டும் என்ற ஆசை எழுந்தது. பட்டப்படிப்பு முடித்தது முதல் யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு ஆர்வமுடன் தயாராகி வந்தேன். 2023ல் எழுதிய அனுபவம், 2024ல் பெரிதும் கைகொடுத்தது. 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், விரிவான பயிற்சி பெற முடிந்தது. சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழக அரசின் பயிற்சி மையம் மற்றும் அகாடமியில் பாடங்களை புரியும் வகையில், தேர்வுக்கு தயாராக அறிவுரைகளை எளிமையாக சொல்லித் தந்தனர். அடிப்படை கல்வி ஊராட்சி பள்ளியில் இருந்தாலும், பள்ளி மேல்நிலை, உயர்கல்வியை சிறப்பாக தொடர்ந்ததால், யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதும் போது சிரமங்கள் இல்லை. 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவில், பெற்றோருடன் பங்கேற்கிறேன்.

