/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகர்ப்புற சுகாதார மையம் ரூ.1.5 கோடியில் அமைகிறது
/
நகர்ப்புற சுகாதார மையம் ரூ.1.5 கோடியில் அமைகிறது
ADDED : ஜூன் 20, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 30 வது வார்டு மேட்டுப்பாளையம் பகுதியில் நகர்ப்புற சுகாதார மையம் கட்டப்படவுள்ளது. 15வதுநிதிக்குழு சுகாதாரமானிய நிதியில் இதற்காக 1.5 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு புதிய மையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கும் வகையில், பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார்துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல குழு தலைவர் கோவிந்தராஜ், கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி, கவுன்சிலர் புஷ்பலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.