தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நகர்ப்புற வாழ்வாதார மையங்கள் சிறப்பாக செயல்படணும் : மகளிர் திட்ட மேலாளர் பேச்சு

 நகர்ப்புற வாழ்வாதார மையங்கள் சிறப்பாக செயல்படணும் : மகளிர் திட்ட மேலாளர் பேச்சு

 நகர்ப்புற வாழ்வாதார மையங்கள் சிறப்பாக செயல்படணும் : மகளிர் திட்ட மேலாளர் பேச்சு


ADDED : ஜன 30, 2026 08:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 08:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

'எளிய தேவையான தகவல்கள் மற்றும் உதவிகள் அனைத்தும் நகர்ப்புற வாழ்வாதார மையங்களில் ஒரே இடத்தில் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்' என, மகளிர் திட்ட மேலாளர் (வாழ்வாதாரம்) நித்தியானந்தம் பேசினார்.

திருப்பூர் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கு, மண்டல அளவிலான பயிற்சி முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மகளிர் திட்ட உதவி இயக்குனர் ஜோதி கிருத்திகா முன்னிலை வகித்தார். மாநில திட்ட மேலாளர் (வாழ்வாதாரம்) நித்தியானந்தம் பயிற்சி அளித்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

நகர்ப்புற வாழ்வாதார மையங்களுக்கு, அரசு சார்பில், 10 லட்சம் ரூபாய் தவணை முறையில் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின், அரசிடமிருந்து நிதி எதிர்பாராமல், சுய வருவாய் ஆதாரங்களை பெருக்கவேண்டும். சுய உதவி குழுக்களின் வளர்ச்சி விகிதம் சிறப்பாக அமைய தேவையான வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியல் அடிப்படையில், நகர்ப்புற ஏழைகளுக்காக பணிபுரிய வேண்டும். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான பாலமாக, நகர்ப்புற வாழ்வாதார மையத்தினர் செயல்பட வேண்டும்.

உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி வருவாய் ஈட்டுவதற்கு வழிகாட்டுவது, இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு அளிப்பதன் வாயிலாகவும், ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தமுடியும்.

நகர்ப்புற வாழ்வாதார மையத்தை நாடி வருவோருக்கு, தேவயான அனைத்து தகவல்கள் மற்றும் உதவிகளும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும்.

ஒரு இடத்தில் பொருட்கள் உற்பத்தி நடைபெறும், வேறொரு இடத்தில், அந்த பொருளுக்கான தேவை இருக்கும். தேவை அதிகமுள்ள இடத்தை கண்டறிந்து பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும்.

இதற்கு, பல வழிகள் இருந்தாலும், இன்றைய காலத்தில், ஆன்லைனில் விளம்பரப்படுத்துவது சிறந்த வழியாக உள்ளது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற வாழ்வாதார மைய மேலாளர்கள் 81 பேருக்கு, அவர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.

அதனடிப்படையில், 'ஏ', 'பி', 'சி' என தரவரிசைப்படுத்தப்படுவர். தரவரிசையில் 'ஏ', 'பி', நிலையில் இடம்பெறுவோர், பணியை தொடரலாம்; 'சி' நிலையில் இடம்பெறுவோர் பணியில் தொடர முடியாது; புதிய நியமனம் நடைபெறும்.

இவ்வாறு, மாநில திட்ட மேலாளர் (வாழ்வாதாரம்) நித்தியானந்தம் பேசினார்.

கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, தர்மபுரி, கோவை ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த நகர்ப்புற உதவி திட்ட அலுவலர்கள், சமுதாய அமைப்பாளர்கள், நகர்ப்புற வாழ்வாதார மைய மேலாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us