/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாப்பில் நெரிசல் தீர்வு காண வலியுறுத்தல்
/
பஸ் ஸ்டாப்பில் நெரிசல் தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : அக் 19, 2025 09:08 PM
உடுமலை: உடுமலை, யூனியன் ஆபீஸ் பஸ் ஸ்டாப்பில், வாகன நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
உடுமலை தளி ரோடு, ரயில்வே மேம்பாலம், ஒன்றிய அலுவலகம், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கோவில்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளது.ஆக்கிரமிப்புகளால், ரோடு குறுகலாக உள்ள நிலையில், பஸ் ஸ்டாப்பில், தாறுமாறாக பஸ்கள் நிற்கும் போது, எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்க வழியில்லாமல், வாகன நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், இரு புறமும் நிழற்கூரை வசதியில்லாதால், பொதுமக்கள், மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
கேரளா மாநிலம் மூணாறு, திருமூர்த்தி, அமராவதி என சுற்றுலா மையங்கள் மற்றும் கிராமங்கள் அதிகளவு உள்ள ரோட்டில், ரோட்டோர ஆக்கிரப்புகளை அகற்றி, நிரந்தர நிழற்கூரை அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், ரோட்டோரத்தில் பஸ்கள் நிற்கும் வகையில் தனி வழித்தடம் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.