/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசைத்தறியாளர் போராட்டம் தீர்வு காண வலியுறுத்தல்
/
விசைத்தறியாளர் போராட்டம் தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : ஏப் 18, 2025 11:48 PM
பல்லடம்: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:
கூலி உயர்வுக்காக போராடி வரும் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்காக குரல் கொடுத்துள்ளனர். கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகங்கள், பேச்சுவார்த்தை நடத்தி வந்த போதும், அது, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக இருப்பதாகவே கருதப்படுகிறது.
தற்போதுள்ள மின் கட்டணத்தை கணக்கில் கொண்டால், தமிழக அரசு, விசைத்தறி தொழிலுக்கு வழங்கிவரும் இலவச மின்சாரம் பெரிய அளவில் பயனளிக்காது. இருப்பினும், கடும் விலைவாசி உயர்வுக்கு இடையிலும், கூலி உயர்வும் கிடைக்காமல், விசைத்தறி தொழில் நடந்து வருகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில், விவசாயத்துக்கு அடுத்ததாக, விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ள நிலையில், இத்தொழில் நலிவடைந்தால், கிராமப்பகுதிகளின் வளர்ச்சி தடைபடும். அமைச்சர்கள், இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் விசைத்தறியாளருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், அதற்கு, தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்.

