/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாப்பில் அதிகரிக்கும் நெரிசல்: நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்
/
பஸ் ஸ்டாப்பில் அதிகரிக்கும் நெரிசல்: நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்
பஸ் ஸ்டாப்பில் அதிகரிக்கும் நெரிசல்: நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்
பஸ் ஸ்டாப்பில் அதிகரிக்கும் நெரிசல்: நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : மார் 03, 2024 08:41 PM

உடுமலை:குமரலிங்கத்தில் குறுகிய ரோட்டில் அமைந்துள்ள பஸ் ஸ்டாப் காரணமாக, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
உடுமலை அருகே, குமரலிங்கம் பேரூராட்சியில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளதோடு, சுற்றுப்புறத்திலுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது.
உடுமலை, பழநி பகுதிகளிலிருந்து ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் நிலையில், உடுமலை - கொழுமம் - பழநி பிரதான வழித்தடத்தில், பஸ் ஸ்டாப் மட்டுமே உள்ளது.
கொழுமம், மடத்துக்குளம், எலையமுத்துார் ரோடு சந்திப்பு பகுதியாகவும் உள்ளதோடு, பஸ்கள் வந்து நின்று, பயணியரை ஏற்றி, இறக்கி விட்டு செல்வதால், பஸ் ஸ்டாப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்துக்களும் நடக்கிறது.
மேலும், பயணியருக்கு தேவையான, நிழற்கூரை, இருக்கை, கழிப்பறை, குடிநீர் என எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கும் வகையிலும், பயணியர் வசதியை கருத்தில் கொண்டும், குமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க திட்டமிட வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

