/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பராமரிப்பில்லாத தடுப்பணைகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
பராமரிப்பில்லாத தடுப்பணைகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பராமரிப்பில்லாத தடுப்பணைகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பராமரிப்பில்லாத தடுப்பணைகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : மார் 26, 2025 09:13 PM
உடுமலை; உடுமலை அருகே, கிராமங்களில் மழை நீர் ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள், பராமரிப்பின்றி, பரிதாப நிலையில் உள்ளது குறித்து, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், சிறிய மழை நீர் ஓடைகளின் குறுக்கே, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், சில ஆண்டுகளுக்கு முன் தடுப்பணைகள் கட்டப்பட்டன.
திட்டத்தில், 'போல்டர்' தடுப்பணை என்ற அடிப்படையில், கருங்கற்களை மட்டும், வரிசையாக அடுக்கி, தண்ணீரை தேக்கி வைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பெரும்பாலான கிராமங்களில், முறையாக தடுப்பணைகள் அமைக்கப்படவில்லை. பெயரளவுக்கு, கற்களை அடுக்கி, திட்ட நிதி வீணடிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சீசனில், வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட, கூடுதலாக, மழை பெய்து, அனைத்து ஓடைகளிலும், நீரோட்டம் இருந்தது. ஆனால், முறையாக அமைக்கப்படாத தடுப்பணைகளில் தண்ணீர் தேங்காமல் வெளியேறியது.
தற்போது கற்களை மாற்று பயன்பாட்டுக்கு எடுத்துச்செல்வதால், தடுப்பணைகள் இருக்கும் சுவடே தெரியாமல் மறைந்தே வருகின்றன.
இவ்வாறு, உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, பெரும்பாலான கிராமங்களில், தடுப்பணைகள் பராமரிப்பின்றி, பரிதாப நிலையில் உள்ளது.
இது குறித்து, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, தடுப்பணைகளை சீரமைக்கவும், முறையாக பணிகள் செய்யாதது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிராம மக்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.