/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசைத்தறி தொழிலை காப்பாற்ற ஜவுளித்துறை செயலரிடம் வலியுறுத்தல்!
/
விசைத்தறி தொழிலை காப்பாற்ற ஜவுளித்துறை செயலரிடம் வலியுறுத்தல்!
விசைத்தறி தொழிலை காப்பாற்ற ஜவுளித்துறை செயலரிடம் வலியுறுத்தல்!
விசைத்தறி தொழிலை காப்பாற்ற ஜவுளித்துறை செயலரிடம் வலியுறுத்தல்!
ADDED : பிப் 05, 2025 12:28 AM
பல்லடம்; விசைத்தறி பிரச்னைகளை களைந்து, தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய ஜவுளித்துறை செயலரிடம், விசைத்தறி சங்க கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
மத்திய ஜவுளித்துறை செயலர் நெல்லம்சாமி ராவ் மற்றும் தமிழக ஜவுளித்துறை கூடுதல் இயக்குனர் லலிதா ஆகியோர், திருப்பூர் மாவட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் விசைத்தறி தொழில் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் சுரேஷ், செயலாளர் வேலுசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
அதில், விசைத்தறி கூட்டமைப்பு சார்பில் மத்திய ஜவுளித்துறை செயலரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள, 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளை சார்ந்து, 10 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த, 10 ஆண்டுகளாக விசைத்தறி தொழில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
மின் பயன்பாடு இத்தொழிலுக்கு பிரதானமாக உள்ள நிலையில், 50 சதவீத மானியத்துடன் சோலார் அமைத்து, 'நெட் மீட்டர்' பொருத்தித் தருவதால், மின் கட்டண சுமை குறையும்.
சாதாரண விசைத்தறிகளை, 50 சதவீத மானியத்துடன், நவீன தறிகளாக மாற்றித் தருவதன் வாயிலாக, கைத்தறிகளைப் போல் விசைத்தறிகளுக்கு ரக ஒதுக்கீடு செய்து வருவதன் வாயிலாகவும் இத்தொழில் மேம்படும். இந்த கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக, மத்திய அரசு வாக்குறுதி அளித்தது.
எனவே, இந்த கோரிக்கைகளை துரித கதியில் நிறைவேற்றி, விசைத்தறி தொழிலை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.