/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடிகளில் கொசுத்தொல்லை தாங்கல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
அங்கன்வாடிகளில் கொசுத்தொல்லை தாங்கல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அங்கன்வாடிகளில் கொசுத்தொல்லை தாங்கல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அங்கன்வாடிகளில் கொசுத்தொல்லை தாங்கல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 07, 2025 08:40 PM
உடுமலை, ;குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையங்களில், கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்தில், 200க்கும் அதிகமான அங்கன்வாடி மையங்கள் உள்ளன. சமூகநலத்துறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், இம்மையங்கள் செயல்படுகின்றன.
இவற்றில், மூன்று முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். அங்கன்வாடி மையங்களில், முதல்பருவ கல்வி மற்றும் பல்வேறு விளையாட்டுகளை பணியாளர்கள் கற்றுத்தருகின்றனர்.
மேலும், அவர்களுக்கான சத்துணவும் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. விளையாட்டு உபகரணங்கள், சில மையங்களில் கூடுதல் இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் பெரும்பான்மையான மையங்களில், கொசுத்தொல்லை அதிகமாகவே உள்ளது. காலை நேரங்களிலும் இத்தொல்லை இருப்பதால், குழந்தைகள் விரைவில் நோய்த்தொற்றுக்குள்ளாவதாக பெற்றோர் அச்சப்படுகின்றனர்.
குறிப்பாக, பருவநிலை மாற்றம் ஏற்படும் நேரங்களில் கொசுத்தொல்லை இருப்பதை கண்டு, குழந்தைகளை மையங்களுக்கு அனுப்புவதற்கு பெற்றோர் மறுக்கின்றனர். இப்பிரச்னைக்கு மையத்தை சுற்றிலும், கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளிப்பதும் நிரந்தர தீர்வாக இருப்பதில்லை.
மீண்டும் கொசுத்தொல்லை ஏற்படுகிறது. இதனால் மையத்தில் ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு கொசு வலை அடிக்கும் வகையில், கூடுதல் நடவடிக்கை எடுப்பதால் மட்டுமே, குழந்தைகள் பாதுகாப்புடன் இருக்க முடியுமென பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.
சமூக நலத்துறை அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கோரிக்கை விடுத்துள்ளனர்.