/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுரங்க பாலத்தில் மேற்கூரை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
சுரங்க பாலத்தில் மேற்கூரை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
சுரங்க பாலத்தில் மேற்கூரை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
சுரங்க பாலத்தில் மேற்கூரை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 08, 2025 10:14 PM

உடுமலை; உடுமலை தளி ரோடு ரயில்வே மேம்பாலத்தில், மேற்கூரை அமைக்கும் பணியை விரைந்து முடிக்கவும், சிதிலமடைந்துள்ள தளத்தை புதுப்பிக்கவும் வேண்டும்.
உடுமலை, தளி ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாலம் அமைந்துள்ளது. ஏராளமான வாகனங்கள் செல்லும் இந்த சுரங்க பாலத்தில், மழை காலங்களில், மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதித்து வருகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், இரு புறமும், மேல் தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, பில்லர்கள் அமைக்கப்பட்டு, கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.
கூரை அமைக்கும் பணி இழுபறியாகி வருகிறது. எனவே, இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், பாலத்தில் கழிவு நீர் தேங்கி, ஓடு தளம் முழுவதும் சேதமடைந்துள்ளது.
குண்டும், குழியுமாக காணப்படுவதால், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. எனவே, ஓடு தளத்தையும் முழுமையாக புதுப்பிக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.