/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆகாசராயர் கோவில் திருப்பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
ஆகாசராயர் கோவில் திருப்பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ஆகாசராயர் கோவில் திருப்பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ஆகாசராயர் கோவில் திருப்பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 28, 2025 06:53 AM

அவிநாசி :   அவிநாசி, வேலாயுதம்பாளையம் ஊராட்சி பகுதியில் பழமை வாய்ந்த ஆகாசராயர் கோவில் உள்ளது.
கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கி கடந்த ஒன்றரை வருடங்களாக மிக மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. சின்ன மற்றும் பெரிய கருணைபாளையம், வேலாயுதம்பாளையம், புதுப்பாளையம் மற்றும் ராயம்பாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் சார்பாக இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இது குறித்து, கிராம மக்கள் கூறியதாவது:
திருப்பணியை தாமதப்படுத்த வேண்டும் என்றே, கோவிலின் உள்பிரகாரத்தில் கட்டப்படும் சுற்றுச்சுவருடன் கூடிய அலங்கார வளைவை ஒரு சமூகத்தினருக்கு எதிரானது என பொய் பிரசாரமும், தவறான தகவலையும் சிலர் பரப்பி வருகின்றனர்.
பல்வேறு சிரமங்களுக்கிடையே திருப்பணிகளை நல்ல முறையில் செய்திட உபயதாரர்கள் மூலம் பல்வேறு உதவிகள் பெறப்பட்டு மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
சித்திரை தேர்த்திருவிழாவுக்காக ஆண்டுதோறும் இரண்டு கிராமங்களில் இருந்து குதிரை எடுத்து வந்து வழிபாடு நடத்தக்கூடிய நடைமுறைகள் தொன்றுதொட்டு உள்ளது.
அந்த சமயத்தில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபெறக்கூடிய எந்த ஒரு  திருப்பணிகளையும் அறநிலையத்துறையும், வருவாய்த் துறையும் அனுமதிக்க கூடாது. கோவில் முன்பாகவும் அதனைச் சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும்,பூஜை முறைகள் பெற்ற ஒவ்வொரு ஊரைச் சேர்ந்தவர்களும் அதற்கு உண்டான காலத்தில் உரிய வகையில் பூஜை செய்வதையும் செயல் அலுவலர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

