/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காய்கறி சாகுபடியில் புதிய முறைக்கு மாறும் விவசாயிகள்; தொழில்நுட்ப உதவிகள் வழங்க வலியுறுத்தல்
/
காய்கறி சாகுபடியில் புதிய முறைக்கு மாறும் விவசாயிகள்; தொழில்நுட்ப உதவிகள் வழங்க வலியுறுத்தல்
காய்கறி சாகுபடியில் புதிய முறைக்கு மாறும் விவசாயிகள்; தொழில்நுட்ப உதவிகள் வழங்க வலியுறுத்தல்
காய்கறி சாகுபடியில் புதிய முறைக்கு மாறும் விவசாயிகள்; தொழில்நுட்ப உதவிகள் வழங்க வலியுறுத்தல்
ADDED : செப் 03, 2025 10:57 PM

உடுமலை; உடுமலை பகுதிகளில் நிலப்போர்வை அமைத்து, காய்கறி சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தோட்டக்கலைத்துறை மானியம் மற்றும் தொழில் நுட்ப உதவிகள் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, பீட்ரூட் என பல்வேறு காய்கறி பயிர்கள், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கோடை காலத்தில், கிணறு மற்றும் போர்வெல்களில், தண்ணீர் வரத்து குறைவு காரணமாக, சாகுபடிக்கு நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
அதே போல், குறைந்த நீரில் அதிக பரப்பளவு சாகுபடி மேற்கொள்ளும் வகையிலும், நீர்த்தேவை குறைவு, களை கட்டுப்பாடு, உரம் தேவை குறைவு உள்ளிட்ட காரணங்களினால், காய்கறி சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், நுண்ணீர் பாசனம், நீர் வழி உரமிடுதல் உட்பட பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் செயல்படுத்துகின்றனர்.
அதில், நிலப்போர்வை எனப்படும், 'மல்ஷிங் ஷீட்' தொழில்நுட்பமும் முக்கியமானதாகும். இத்தொழில்நுட்பத்தில், மேட்டுப்பாத்தி அமைத்த, 'ஷீட்' அதன் மேல் பரப்பப்படுகிறது.
செடிகளுக்கு போதிய இடைவெளி விட்டு, துளைகளும், அதற்கேற்ப, சொட்டு நீரும் அமைத்துக்கொள்ளலாம்.
இதனால், கோடை காலத்தில், அதிகளவு தண்ணீர் ஆவியாவது தடுக்கப்படுகிறது; களைகளும் முளைக்காது; செடிகளுக்கு தேவையான தண்ணீர், வேரின் அருகிலேயே கிடைக்கும்.
இந்த தொழில்நுட்பத்துக்கு, விவசாயிகளிடையே அதிக ஆர்வம் இருந்தாலும், அதிக செலவாகிறது. எனவே, 'மல்ஷிங் ஷீட்' முறையில் காய்கறி சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு மானிய உதவிகள் மற்றும் தொழில் நுட்ப உதவிகளை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வழங்க வேண்டும், என்பதே விவசாயிகள் எதிர்பார்ப்பு.