/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏற்றுமதியாளருடன் அமெரிக்க துாதரக அதிகாரி சந்திப்பு
/
ஏற்றுமதியாளருடன் அமெரிக்க துாதரக அதிகாரி சந்திப்பு
ஏற்றுமதியாளருடன் அமெரிக்க துாதரக அதிகாரி சந்திப்பு
ஏற்றுமதியாளருடன் அமெரிக்க துாதரக அதிகாரி சந்திப்பு
ADDED : டிச 07, 2024 06:37 AM

திருப்பூர்; அமெரிக்க துாதரக அதிகாரி, திருப்பூர் ஏற்றுமதியாளர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
சென்னையில் உள்ள அமெரிக்க துாதரக பெண் அதிகாரி சாண்டினா கூப்பர், துாதரக ஆய்வாளர் ராஜலட்சுமி ஆகியோர், நேற்று முன்தினம் திருப்பூர் வந்து, ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடினர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல், தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர் குமார் துரைசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கலந்துரையாடினர். திருப்பூர் தொழில்துறையின் சாதனைகளை விளக்கி, குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
திருப்பூர் வருகை எதற்காக?
அமெரிக்க துாதரக அதிகாரி பேசுகையில், ''திருப்பூர் ஏற்றுமதி தொழில் குறித்து, அமெரிக்க வர்த்தகர்கள் நன்கு அறிவர். பின்னலாடை ஏற்றுமதி தொழில், அமெரிக்க சந்தை வாய்ப்புகள், அதன் முக்கியத்துவம் குறித்த நுண்ணறிவை பெற வேண்டும் என்ற நோக்கில், திருப்பூர் வந்துள்ளோம்.
திருப்பூரில் இருந்து வரும், அதிக அளவு விசா விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. அதிக மதிப்பில் வணிகம் செய்யும் தனி நபர்கள் இருந்தாலும், அவர்கள் வணிக உரிமை கோருவதை சரிபார்க்க, வலைதளம் போன்ற ஆதார ஆவணங்கள் இருப்பதில்லை,'' என்றார்.