/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமெரிக்காவின் வரி விதிப்பு; போராட்டம் நடத்த திட்டம்
/
அமெரிக்காவின் வரி விதிப்பு; போராட்டம் நடத்த திட்டம்
அமெரிக்காவின் வரி விதிப்பு; போராட்டம் நடத்த திட்டம்
அமெரிக்காவின் வரி விதிப்பு; போராட்டம் நடத்த திட்டம்
ADDED : ஆக 30, 2025 12:33 AM
திருப்பூர்; அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளை கண்டித்து தொடர் போராட்டம் நடத்துவது குறித்து தொழிற்சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர்.
இந்திய பொருட்கள் மீது அதிகப்படியான வரி விதிப்பை, அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இதைக் கண்டித்தும், கூடுதல் வரிகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
இது குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று திருப்பூர் இ.கம்யூ., அலுவலகத்தில் நடந்தது. ஏ.ஐ.டி.யூ.சி., காளியப்பன் தலைமை வகித்தார். பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அமெரிக்காவின் வர்த்தக போரை கண்டிப்பது; நாட்டின் சுய சார்பு கொள்கை மற்றும் ஏற்றுமதி வர்த்தகம், தொழிலாளர் வேலை பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருதி தொடர் போராட்டங்கள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.