/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழுஉரங்களை ஊட்டமேற்றி பயன்படுத்துங்க! விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்
/
தொழுஉரங்களை ஊட்டமேற்றி பயன்படுத்துங்க! விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்
தொழுஉரங்களை ஊட்டமேற்றி பயன்படுத்துங்க! விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்
தொழுஉரங்களை ஊட்டமேற்றி பயன்படுத்துங்க! விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்
ADDED : டிச 12, 2024 05:46 AM

உடுமலை, ; தொழு உரங்களை ஊட்டமேற்றி, அடியுரமாக பயன்படுத்துவதால், பல்வேறு சத்துகள் மண்ணுக்கு எளிதாக கிடைத்து, மண் வளம் அதிகரிக்கும் என, கோவை வேளாண் பல்கலை., சார்பில், விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், கிணற்றுப்பாசனத்துக்கு ஆண்டு முழுவதும் விளைநிலங்களில், பலவகை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ச்சியாக ஒரே வகையான சாகுபடிகளை மேற்கொள்வதால், மண் வளம் பாதிக்கிறது. எனவே, மகசூல் குறைந்து, சாகுபடி செலவும் அதிகரிக்கிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பருவமழை காலங்களில், விளைநிலங்களில், தொழு உரத்தை அடியுரமாக பயன்படுத்தும் முறையை, உடுமலை வட்டார விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.
குறிப்பாக மாட்டுச்சாணம், கோழி எரு பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது.
மாட்டுச்சாணத்தை உள்ளூர் பகுதிகளிலும், கோழி எருவை பிற பகுதிகளில் இருந்தும் கொள்முதல் செய்கின்றனர். மண்ணில் இந்த உரங்களை இட்டு, உழவு செய்து அடியுரமாக பயன்படுத்துகின்றனர்.
இதனால், அடுத்த சாகுபடிக்கு மண் வளம் அதிகரித்து, விளைச்சல் குறையாது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கோழிப்பண்ணை கழிவுகளை உரமாக்கும் தொழில்நுட்பங்களை முறையாக பின்பற்ற வேண்டும் என கோவை வேளாண் பல்கலை., அறிவுறுத்தியுள்ளது.
இதை பின்பற்றுங்க!
கோழிப்பண்ணை கழிவில், பொதுவாக தழைச்சத்து அதிகமாகவும், கரிமம் தழைச்சத்தின் விகிதம் குறைவாகவும் உள்ளது. இக்கழிவில், 60 சதவீத தழைச்சத்தானது யூரிக் அமிலம் மற்றும் யூரியாகவாக உள்ளது.
இது நீராற் பகுத்தல் மூலம் அம்மோனியா வாயுவாக மாறி வெளியேறுவதால், தழைச்சத்து இழப்பு ஏற்படுகிறது. கோழி எருவில் இருந்து அம்மோனியா ஆவியாதலை பல்வேறு வழிகளை குறைக்கலாம்.
கோழி எருவினை, அதிக கரிம பொருள் கலந்த அங்கக கழிவுப்பொருட்களுடன் மக்கச் செய்வதால், அம்மோனியா ஆவியாதலை தற்காலிகமாக நிலைப்படுத்த முடியும்.
கோழி எருவை சேகரித்தபின்னர், கழிவு மக்குவதற்கு ஏதுவாக, கரிமம், தழைச்சத்தின் விகிதம் 25 முதல் 30 வரை உள்ளவாறு 2 செ.மீ.,க்கும் குறைவாக துண்டாக்கப்பட்ட வைக்கோல் உடன் கலக்கப்படுகிறது.
ஒரு டன் கழிவுடன், 250 கிராம் அடங்கிய 5 பாக்கெட் சிப்பிக் காளான் விதை உட்செலுத்தப்பட்டு, பின்பு, கோழி எரு மற்றும் வைக்கோல் கலவை நிழலின் கீழ் குவியலாக்கப்படுகிறது. குவியலின் ஈரப்பதம் 40-50 சதவீதம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு, செய்வதால் 50 நாட்களுக்குள் கோழிப்பண்ணை கழிவு மற்றும் வைக்கோல் கலவையானது முழுமையான மக்கிய உரமாக மாற்றப்படுகிறது.
இந்த மட்கிய உரத்தில், தழைச்சத்து - 1.89, மணிச்சத்து - 1.83, சாம்பல் சத்து 1.34 சதவீதமும், கரிம - தழைச்சத்து விகிதம், 12;20 என்றளவில் இருக்கும். இதனால் மண் வளம் மேம்படும்.
இவ்வாறு, கோவை வேளாண் பல்கலை., யினர் வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர்.

