/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் ஆண்டு விழா கோலாகலம்
/
ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் ஆண்டு விழா கோலாகலம்
ADDED : ஜன 24, 2026 04:35 AM

திருப்பூர்: ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 35வது ஆண்டுவிழா மிக சிறப்பாக நடந்தது.
பள்ளி நிர்வாகி கீதாராணி தியாகராஜன், கோமதி செந்தில்நாதன் மற்றும் ஈரோடு வழக்கறிஞர் சவிதா பாலசுப்பிரமணியம் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர். பள்ளி தலைவர் தியாகராஜன் வரவேற்றார். பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். பெருந்துறை, கொங்கு வேளாளர் அறக்கட்டளையின் தலைவர் தேவராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
பள்ளியின் துணைத்தலைவர் கருப்புசாமி, தாளாளர் பாலசுப்ரமணியம், செயலாளர் செந்தில்நாதன், துணை செயலாளர் தங்கராஜ், நிர்வாக உறுப்பினர் பெரியசாமி மற்றும் அனைத்து நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பி.டி.ஏ. தலைவர் ஞானசேகரன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி சிறப்பித்தனர். கலைநிகழ்ச்சியை தமிழாசிரியர் ராசகுமாரன் ஒருங்கிணைத்து வழங்கினார். பொருளாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

