/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உத்தமலிங்கேஸ்வரர் கும்பாபிஷேகம் தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம்
/
உத்தமலிங்கேஸ்வரர் கும்பாபிஷேகம் தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம்
உத்தமலிங்கேஸ்வரர் கும்பாபிஷேகம் தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம்
உத்தமலிங்கேஸ்வரர் கும்பாபிஷேகம் தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம்
ADDED : ஆக 25, 2024 12:04 AM

அனுப்பர்பாளையம்;பெருமாநல்லுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும், 28ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 6:30 முதல் 7:30 மணிக்குள் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகமும் தொடர்ந்து, 9:00 முதல், 9:40 மணிக்குள் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகமும் நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று பக்தர்கள் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரிகை கோவிலுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று காலை கொண்டத்து காளியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்து கொண்டு மேளதாளம், வாணவேடிக்கை முழங்க பட்டாசு வெடிக்க ஊர்வலமாக உத்தம லிங்கேஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சென்றனர். எம்.எல்.ஏ., விஜயகுமார் தீர்த்தக்குடம் சுமந்து ஊர்வலத்தில் பங்கேற்றார். முன்னாள் எம்.பி., சிவசாமி மற்றும் கோவில் முன்னாள் நிர்வாகிகள் அறங்காவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு கொண்டத்து காளியம்மன் கோவில் வளாகத்தில் வைத்து அன்னதானம் வழங்கப்பட்டது.
----
2 படங்கள் 5 காலம்
பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி, எம்.எல்.ஏ., விஜயகுமார் உள்ளிட்டோர் தீர்த்தக்குடம் சுமந்தனர்.
முளைப்பாரி சுமந்த பக்தர்கள்.