sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வளரிளம் சிறுமிகளுக்கு தடுப்பூசி! சுகாதாரத்துறை அழைப்பு

/

வளரிளம் சிறுமிகளுக்கு தடுப்பூசி! சுகாதாரத்துறை அழைப்பு

வளரிளம் சிறுமிகளுக்கு தடுப்பூசி! சுகாதாரத்துறை அழைப்பு

வளரிளம் சிறுமிகளுக்கு தடுப்பூசி! சுகாதாரத்துறை அழைப்பு


UPDATED : மார் 13, 2026 08:56 AM

ADDED : மார் 13, 2026 05:47 AM

Google News

UPDATED : மார் 13, 2026 08:56 AM ADDED : மார் 13, 2026 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: வளரிளம் சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் துவங்கியுள்ளது. 14 வயது பெண் குழந்தைகளுக்கு இதனை செலுத்தி கொள்ளலாம் என, சுகாதார பணிகள் துறை தெரிவித்துள்ளது.

'ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்' (ெஹச்.பி.வி.) கிருமித்தொற்று காரணமாக, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கர்ப்பபை வாயின் உயிரணுக்களில் புற்றுநோய் செல்கள் பரவி, அதன் திசுக்களை பாதிக்கும். உரிய நேரத்தில் கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரல், கல்லீரல், சிறுநீர்ப்பை, மலக்குடல் உள்ளிட்ட பிற உறுப்புகளுக்கு பரவ வாய்ப்புள்ளது.

பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தமிழக சுகாதாரத்துறை இணைந்து, 14 வயதுடைய வளரிளம் சிறுமிகளுக்கு ெஹச்.பி.வி. எனப்படும் தடுப்பூசி செலுத்தும் பணியை துவக்கியுள்ளது. மார்ச் முதல் மே வரை இந்த பணி அனைத்து மாவட்டங்களிலும் நடக்கிறது.

இது குறித்து, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி கூறியதாவது:

எதிர்காலத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பதே இருக்க கூடாது என்பதற்காக ெஹச்.பி.வி. தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தடுப்பூசிகளை போல பெண் குழந்தைகள், வளரிளம் சிறுமிகளுக்கு இந்த தடுப்பூசியையும் செலுத்தலாம். மருத்துவ பணிகள் கழகம் மூலம் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு, இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் ெஹச்.பி.வி. தடுப்பூசி போடும் பணி துவங்கி நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்த வருவோர் ஆதார் அட்டை, மொபைல் போன் கொண்டு வர வேண்டும். 14 வயது வளரிளம் இளம் பெண்களுக்கு, இந்த தடுப்பூசி முன்னெச்சரிக்கையாக செலுத்திக் கொள்ளலாம். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 500க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

எதிர்காலத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பதே இருக்க கூடாது என்பதற்காக ெஹச்.பி.வி. தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது


ஏன் 14 வயது? எச்.பி.வி. வைரஸ் உடலில் ஏற்படுவதற்கு முன்பே தடுப்பூசி போடுவது தான் மிகச்சிறந்தது. 14 வயதில் தடுப்பூசி செலுத்துவது சிறுமியருக்கு நீண்ட கால நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதோடு, எதிர்காலத்தில் அவர்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை பெருமளவு குறைக்கும். 14 வயது சிறுமியருக்கு இந்த தடுப்பூசி வலிமை, பாதுகாப்பை தருவதாக உறுதிப்படுத்தியதால், இந்த வயதில் செலுத்தப்படுகிறது என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us