/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கயத்தில் முகாம் நாய்களுக்கு தடுப்பூசி
/
காங்கயத்தில் முகாம் நாய்களுக்கு தடுப்பூசி
ADDED : ஏப் 18, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்; காங்கயம், வெள்ளகோவில், ஊதியூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் நாய்கள் கடித்து ஆடுகள் இறந்து வருகிறது. ரோட்டில் செல்பவர்களை கடித்தும் வந்தது. தெருநாய்களால் அனைத்து தரப்பு மக்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இச்சூழலில், காங்கயம் நகராட்சி சார்பில், நாய் வளர்ப்பவர்களுக்கு தடுப்பு ஊசி போடுவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு, நேற்று சிறப்பு முகாம் நடந்தது. திருப்பூர் கால்நடை பராமரிப்பு துறை மண்டல துணை இயக்குனர் பிரகாஷ், கால்நடை டாக்டர் பகலவன் தலைமையில் மருத்துவ குழுவினர், 56 நாய்களுக்கு தடுப்பு ஊசிகளை வழங்கினர். காங்கயம் நகராட்சி தலைவர் சூர்யபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.