/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வைகாசி விசாக தேரோட்டம் தேருக்கு முகூர்த்தக்கால் பூஜை
/
வைகாசி விசாக தேரோட்டம் தேருக்கு முகூர்த்தக்கால் பூஜை
வைகாசி விசாக தேரோட்டம் தேருக்கு முகூர்த்தக்கால் பூஜை
வைகாசி விசாக தேரோட்டம் தேருக்கு முகூர்த்தக்கால் பூஜை
ADDED : மே 10, 2025 02:27 AM

திருப்பூர்,: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று தேர்களுக்கு முகூர்த்தக்கால் பூஜை நடந்தது.
ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில், வைகாசி விசாக தேர்த்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. இந்தாண்டு, ஜூன் 2 கிராமசாந்தி, 3ம் தேதி கொடியேற்றத்துடன் தேரோட்டம் துவங்குகிறது.
ஜூன் 7ல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு மற்றும் கருட வாகனம், 8ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டம், 9ம் தேதியும், வீரராகவப்பெருமாள் தேரோட்டம், 10ம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தேர்களுக்கு நேற்று முகூர்த்தக்கால் நட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப்பெருமாள் கோவில் தேர்கள் மேற்புற பலகை பழுதாகியிருந்த நிலையில், தேர் ஸ்தபதியரால் சீரமைக்கப்பட்டது. வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று முகூர்த்தக்கால் பூஜைகள் நடந்தது.
அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், அறங்காவலர்கள் சம்பத்குமார், பரமசிவம், பிருந்தா, அர்த்தனாரீஸ்வரன், செயல் அலுவலர் வனராஜா முன்னிலையில், மங்கள இசையுடன் முகூர்த்தக்கால் பூஜைகள் நடந்தது.
சிவாச்சாரியார்கள், வேக ஆகம மந்திரங்களை பாராயணம் செய்து, மாவிலை மற்றும் மங்கள பொருட்கள் கட்டி, பன்னீர் மற்றும் பூஜிக்கப்பட்ட தீர்த்தம் தெளித்து, விஸ்வேஸ்வரர் தேரின் மீது முகூர்த்தக்கால் பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, பட்டாச்சாரியார்களும், பெருமாள் தேருக்கு முகூர்த்தக்கால் நட்டு வைத்து, மகாதீபாராதனை நடந்தது.
பூஜையில் பங்கேற்ற தேர் மிராசு மற்றும் தேர் பிரமுகர்கள், தேர்களை தயார்படுத்தி, சாரம் அமைத்து, அலங்கரிக்கும் பணியை துவக்குவர்; ஜூன் 5ம் தேதி தேர் மகுடகலசம் வைக்கும் பூஜைகள் நடக்குமென, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.