/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாஜ்பாய் நுாற்றாண்டு விழா 22 வீடுகளுக்கு காஸ் சிலிண்டர்
/
வாஜ்பாய் நுாற்றாண்டு விழா 22 வீடுகளுக்கு காஸ் சிலிண்டர்
வாஜ்பாய் நுாற்றாண்டு விழா 22 வீடுகளுக்கு காஸ் சிலிண்டர்
வாஜ்பாய் நுாற்றாண்டு விழா 22 வீடுகளுக்கு காஸ் சிலிண்டர்
ADDED : டிச 28, 2025 07:02 AM

பல்லடம்: பல்லடம் அருகே பூமலுார் கிராமத்தில், பா.ஜ. சார்பில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, 22 குடும்பத்தினருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் காஸ் சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டன.
பல்லடம் மேற்கு ஒன்றிய பா.ஜ. தலைவர் ஹரிஹரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர்கள் துரைக்கண்ணன், மோகன்குமார், மாவட்ட பொது செயலாளர் வினோத் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
பா.ஜ. மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் விஜயகுமார், மண்டல தலைவர்கள் ரமேஷ்குமார், சதீஷ் மற்றும் நிர்வாகிகள் தங்கவேல், சத்தியமூர்த்தி, மகேஷ் மூர்த்தி மற்றும் ஜீவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.