ADDED : டிச 25, 2024 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 100வது பிறந்த நாள் விழா, திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், 19 மண்டலங்களில் உள்ள 1, 033 பூத்களில் கொண்டாடப்பட்டது.
வாஜ்பாய் படத்துக்கு மலர் துாவி பா.ஜ.,வினர் மரியாதை செய்தனர். பல இடங்களில் உறுப்பினர் சேர்க்கையும் நடந்தது. அதில், திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் சீனிவாசன், மாநில செயலாளர் மலர்க்கொடி, மாவட்ட துணை தலைவர்கள் பாலு, சுப்ரமணியம், தங்கராஜ், கலாமணி, மோகனசுந்தரம், மண்டல தலைவர்கள் வேலுசாமி, பூபதி பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

