/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வள்ளி கும்மி அரங்கேற்றம்
/
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வள்ளி கும்மி அரங்கேற்றம்
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வள்ளி கும்மி அரங்கேற்றம்
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வள்ளி கும்மி அரங்கேற்றம்
ADDED : மார் 18, 2024 12:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை விழாவின் 44ம் நாளை முன்னிட்டு கோவில் வளாகத்தில், வள்ளி மணாளன் கலைக் குழுவினரின் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, 63 வேலம்பாளையம் வேல்மயில் வள்ளி கும்மியாட்ட குழு ஆசிரியர்கள் சங்கர் கணேஷ், சதீஷ்குமார், ஓம் முருகேஷ், தியாகு ஆகியோர் 100 பெண்களுக்கு கடந்த ஒரு மாதமாக பயிற்சி அளித்தனர்.
இதில் வரலாற்றுத் தொடர்புடைய கிராமிய பாடலுக்கு ஏற்றவாறு வள்ளி கும்மியாட்டம் ஆடினர்.
இந்நிகழ்ச்சியை, அவிநாசியப்பர் உழவாரப் பணிக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.