ADDED : ஜன 09, 2025 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், செல்லப்பபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இணைக்கும் கண்ணாடி பாலம் காட்சிப்படுத்துதல் நிகழ்வு நடந்தது.
மங்கை பாரதி பதிப்பகம் நிறுவனர் கந்தசாமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி, திரு வள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் நிறுவப்பட்டதன் வரலாறு, கண்ணாடி பாலம் குறித்து மாணவ, மாணவியரிடம் விளக்கினார்.
சமீபத்தில் தமிழக அரசால் திறக்கப்பட்ட கண்ணாடி பாலம், விவேகானந்தர் பாறை இணைப்பு சாலை குறித்த செய்தி, படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.

