sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வலுப்பூரம்மன் தேரோட்டம்; வடம் பிடித்து பக்தர்கள் பரவசம்

/

வலுப்பூரம்மன் தேரோட்டம்; வடம் பிடித்து பக்தர்கள் பரவசம்

வலுப்பூரம்மன் தேரோட்டம்; வடம் பிடித்து பக்தர்கள் பரவசம்

வலுப்பூரம்மன் தேரோட்டம்; வடம் பிடித்து பக்தர்கள் பரவசம்


ADDED : பிப் 05, 2025 12:35 AM

Google News

ADDED : பிப் 05, 2025 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்; பொங்கலுார் ஒன்றியம், சேமலைக்கவுண்டம்பாளையம் - வலுப்பூரம்மன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து காப்பு கட்டுதல், மகா அபிஷேகம், அம்மன் புறப்பாடு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அம்மன் திருவீதி உலா நடந்தது.

திருவிழாவில், நேற்று மாலை, 3:00 மணிக்கு அலகுமலையில் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை பொங்கலுார் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் குமார் துவக்கி வைத்தார்.

'ஓம் சக்தி... பராசக்தி' என கோஷமிட்டவாறு, பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். மாலை, 5:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில், வலுப்பூரம்மன் கோவில் திருப்பணி குழு தலைவர் சிதம்பரம், பெருந்தொழுவு ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us