/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அட்டைப்பெட்டி ஏற்றிய வேன் தீயில் கருகி நாசம்
/
அட்டைப்பெட்டி ஏற்றிய வேன் தீயில் கருகி நாசம்
ADDED : டிச 20, 2024 04:13 AM

பல்லடம்; பல்லடம் அருகே, அட்டைப்பெட்டிகள் ஏற்றி வந்த வேன், நடுரோட்டில், தீயில் கருகி நாசமானது.
பல்லடம் ஒன்றியம், தெற்குப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து, அட்டைப்பெட்டி ஏற்றிய, வேன் ஒன்று, நேற்று அதிகாலை சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டது. மங்கலம் ரோடு, மூனுமடை பகுதியில் வேன் சென்று கொண்டிருக்க, வேனின் பின்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. அதிர்ச்சி அடைந்த டிரைவர் சதீஷ்குமார், வேனை நிறுத்திவிட்டு, கீழே இறங்கிப் பார்த்தபோது, அட்டைப்பெட்டிகள் தீப்பிடித்து எரிய துவங்கின.
அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், பல்லடம் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அதற்குள், வேன் கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர்.
இருப்பினும், வேன் முழுமையாக தீயில் எரிந்து கருகி நாசமானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ஓடும் வேனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.