/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மறைந்து வரும் ஏர் கலப்பை; டிராக்டருக்கு மாறிய விவசாயிகள்
/
மறைந்து வரும் ஏர் கலப்பை; டிராக்டருக்கு மாறிய விவசாயிகள்
மறைந்து வரும் ஏர் கலப்பை; டிராக்டருக்கு மாறிய விவசாயிகள்
மறைந்து வரும் ஏர் கலப்பை; டிராக்டருக்கு மாறிய விவசாயிகள்
ADDED : அக் 09, 2024 12:38 AM

பொங்கலுார் : புரட்டாசி பட்டம் துவங்கியுள்ளது. தற்போது பெய்து வரும் மழை புரட்டாசி பட்ட சாகுபடிக்கு கை கொடுத்துள்ளது. இதனால், விவசாயிகள் உற்சாகமாக விதைப்பு பணிகளை துவக்கி உள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு முன் வரை, மழை பெய்தால் மாடுகளைக் கொண்டு ஏர்பூட்டி உழவு ஓட்டுவர். விவசாயிகள் ஒன்று முதல் இரண்டு ஏர் வரை வைத்திருப்பர். இதற்காக மாடுகளை உழவு ஓட்ட பழக்கி வைத்திருப்பர். மாடு மேய்ப்பதற்கென்றே ஓர் ஆளை நியமித்திருப்பர். மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களும் இருந்தது.
தற்போது, அந்திக காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இளைய தலைமுறை விவசாயத்திற்கு வந்த பின் மாடுகளை வைத்து உழவு ஓட்டும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது என்றே கூறலாம். சொந்த டிராக்டர் வாங்க முடியாதவர்கள் வாடகை டிராக்டரை வைத்தாவது உழவு ஓட்டும் பணியை செய்து வருகின்றனர். பொங்கல் நாளில், பூஜை செய்வதற்கு மட்டுமே ஏர் கலப்பை காட்சி பொருளாக வைக்கப்படுகிறது.
கடின உழைப்பு காலதாமதம் ஏற்பட்டாலும் மாடுகளை வைத்து உழவு ஓட்டுவது தற்சார்பு பொருளாதாரத்தை துாக்கி நிறுத்தியது. தற்பொழுது நவீன உலகில் விவசாயிகள் தற்சார்பு பொருளாதாரத்தில் இருந்து முற்றிலும் மாறி பிறரை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இதனால், உரத்திற்காகவும், உழவுக்காகவும் பெரும் சுமையை உழவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர் என்றே கூறலாம்.