/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வி.ஏ.ஓ., சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு
/
வி.ஏ.ஓ., சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : பிப் 10, 2025 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை திருமூர்த்திமலையில், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
உடுமலை திருமூர்த்தி மலையில், கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. மாநில தலைவர் சசிக்குமார், பொதுச்செயலாளர் குமார், செயலாளர் உதய சூரியன், துணை தலைவர் ஜான்போஸ்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில்,திருப்பூர் மாவட்ட தலைவராக காளிமுத்து, செயலாளராக ரமேஷ், பொருளாளராக ராஜா, துணை தலைவராக மகேஸ்வரன், துணை செயலாளராக சொக்கர் உள்ளிட்டோர் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 200க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.

