/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நடைமுறை பின்பற்றப்படாமல் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகங்கள்
/
நடைமுறை பின்பற்றப்படாமல் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகங்கள்
நடைமுறை பின்பற்றப்படாமல் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகங்கள்
நடைமுறை பின்பற்றப்படாமல் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகங்கள்
ADDED : பிப் 04, 2024 08:28 PM
உடுமலை;கிராம நிர்வாக அலுவலகங்களில், கிராம நிர்வாக அலுவலர் இல்லாதபோது, அறிவிப்புப்பலகையில் முகாம் சென்றுள்ள இடம், உத்தேசமாக திரும்பும் நேரம் போன்றவற்றை குறிப்பிட்டுச் செல்ல வேண்டும். ஆனால், இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. பொதுமக்கள் தவிக்கின்றனர்.
பட்டா மாறுதல், பிறப்பு இறப்பு சான்றுகள், ஜாதி, வருமான சான்று உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரை நாடுகின்றனர். ஆனால், பெரும்பாலான கிராமங்களில், கிராம நிர்வாக அலுவலர்கள், பல்வேறு களப்பணிகள் காரணமாக வெளியே சென்று விடுகின்றனர்.
களப்பணிக்கு செல்லும்போதும், துறை ரீதியான கூட்டம் உள்ளிட்டவை நடைபெறும்போதும், இது குறித்து தகவல்களை, வி.ஏ.ஓ., அலுவலகம் முன் உள்ள அறிவிப்பு பலகையில் எழுதிச்செல்ல வேண்டும்.
முகாம் சென்றுள்ள இடம், உத்தேசமாக திரும்பும் நேரம் உள்ளிட்டவை அந்த அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டு இருந்திருந்தால், பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
ஆனால், பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலகங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.
எனவே, மக்கள் தேவையின்றி அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க, வி.ஏ.ஓ., அலுவலகங்களில் உள்ள அறிவிப்பு பலகைகளை செயல்பாட்டுக்கு கொண்டுவர வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

