ADDED : டிச 31, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு, மாவட்ட தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். பொருளாளர் ராஜா வரவேற்றார். மாநில தலைவர் சசிக்குமார், போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
குடிநீர், கழிப்பறை வசதியுடன் வி.ஏ.ஓ., அலுவலகம் அமைக்க வேண்டும். பத்தாண்டு பணி நிறைவு செய்தவர்களுக்கு தேர்வு நிலை என்றும், அதற்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்பு நிலை வி.ஏ.ஓ., என்றும் மாற்றப்பட வேண்டும். பதவி உயர்வுக்கான காலவரம்பு, ஆறு ஆண்டுகள் என்பதை, மூன்று ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

