ADDED : ஜூலை 20, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டுத் தீர்மானம் குறித்த விளக்க கூட்டம், ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் சார்பில் பெருமாநல்லுாரில் நடந்தது.
மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ், தொகுதி செயலாளர் ரங்கசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட அளவில், பல்லடத்தில் மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டது. வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.