/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீரபாண்டிய கட்டபொம்மன் 265வது பிறந்த நாள் விழா
/
வீரபாண்டிய கட்டபொம்மன் 265வது பிறந்த நாள் விழா
ADDED : ஜன 04, 2025 12:21 AM

திருப்பூர்; ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து போராடி, துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின், 265வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாரப்பாளையத்தில் உள்ள அவரது முழு உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், வீரபாண்டிய கட்ட பொம்மன் கலை பண்பாட்டு கழகம் சார்பில், தலைவர் மணி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., செல்வராஜ் தலைமையில், நகர செயலாளர்கள் தினேஷ்குமார், நாகராஜ் முன்னிலையில் கட்சியினர் , கட்ட பொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தே.மு.தி.க., சார்பில் மாவட்ட தலைவர் குழந்தைவேலு தலைமையில், நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கட்ட பொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

