UPDATED : அக் 15, 2026 12:59 AM
ADDED : அக் 15, 2026 12:56 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மலை காய்கறி வரத்து குறைந்துள்ளது; அவற்றின் விலை உயர்ந்துள்ளது.
வழக்கமாக கேரட் விலை, 30 – 50 ரூபாய்க்கும், பீன்ஸ், 70 – 80 ரூபாய்க்கும் விற்கும். மழை காரணமாக, மலை காய்கறி வரத்து குறைந்ததால், நேற்று கேரட், 65 – 70 ரூபாய்க்கும், பீன்ஸ், 90 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. பூண்டு கிலோ, 200ல் இருந்து, 220 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
ஊட்டி பீட்ரூட் கிலோவுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 70 ரூபாய்க்கு விற்றது. தக்காளி விலை உயர்வை தொடர்ந்து, நாட்டு காய்கறிகளின் விலை சற்று உயர்ந்து வருகிறது. இந்நிலையில், மலை காய்கறிகள் விலை நடப்பு வாரம் உயர்ந்துள்ளது.
