/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் சந்தைகளில் ரூ.10 கோடி காய்கறி விற்பனை
/
உழவர் சந்தைகளில் ரூ.10 கோடி காய்கறி விற்பனை
ADDED : அக் 10, 2025 11:11 PM
திருப்பூர்; திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தையில், கடந்த மாதம், 10.24 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனை நடந்தது.
திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையத்தில் தெற்கு உழவர் சந்தை உள்ளது. கடந்த மாதம் சந்தைக்கு 7,123 விவசாயிகள் வந்தனர். 2,185 மெட்ரிக் டன் காய்கறி, 7.24 கோடிக்கு விற்பனையானது.
திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் பின் வடக்கு உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு கடந்த மாதம், 781 மெட்ரிக் டன் காய்கறிகளை 3,092 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இரண்டு உழவர் சந்தைகளிலும், 1.97 லட்சம் வாடிக்கையாளர்கள் காய்கறி, கீரை, பழங்களை வாங்கிச் செல்ல வந்தனர். ஒரு மாதத்தில், 10.24 கோடி ரூபாய்க்கு விற்பனைநடந்துள்ளது.
உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில், 'செப். மாதத்தின் கடைசி வாரம் காலாண்டுத்தேர்வு விடுமுறை என்பதால், பள்ளி விடுதிகள் மற்றும் மொத்த காய்கறி விற்பனை சற்று குறைந்தது.
அக்., துவக்கமே ஆயுத பூஜை என்பதால், விற்பனை பரவாயில்லை. அவ்வகையில், மொத்தம், 10.24 கோடி ரூபாய்க்கு காய்கறி வர்த்தகம்நடந்துள்ளது,' என்றனர்.