/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்; அடைபட்ட கால்வாய்கள்.. அலறும் பொதுமக்கள்
/
வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்; அடைபட்ட கால்வாய்கள்.. அலறும் பொதுமக்கள்
வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்; அடைபட்ட கால்வாய்கள்.. அலறும் பொதுமக்கள்
வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்; அடைபட்ட கால்வாய்கள்.. அலறும் பொதுமக்கள்
ADDED : அக் 10, 2025 11:10 PM

திருப்பூர்: திருப்பூரில் பாதாள சாக்கடை மற்றும் திறந்த நிலை சாக்கடை கால்வாய்களை அடைக்கும் பாலிதீன் உள்ளிட்ட கழிவுகளால் மக்கள் பெரும்பாடு படுகின்றனர். வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் புகுவதால் மக்கள் திண்டாடுகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதில், குழாய்கள் பதிக்கப்பட்டு கழிவு நீர் கொண்டு செல்லப்படுகிறது. இது தவிர பல கி.மீ., நீளத்தில் திறந்த மற்றும் மூடப்பட்ட சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
திறந்த நிலையில் உள்ள கால்வாய்களில் ரோட்டோரம் சேகரமாகும் மண், காற்றில் பறந்து வரும் குப்பைகளும் சென்று சேர்கிறது. இது தவிர வீடுகள், கடைகள் மற்றும் நிறுவனங்களிலிருந்து வீசியெறியப்படும் பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட மக்காத கழிவுகளும் சேர்கிறது.
இது போன்ற காரணங்களால், கழிவு நீர் செல்ல வேண்டிய கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு தேங்கும் அவலம் தொடர் கதையாக உள்ளது.கழிவு நீர் செல்ல வழியின்றி பாதாள சாக்கடை குழாய்களில் ஆங்காங்கே 'மேன் ேஹால்களில்' பொத்துக் கொண்டு ரோட்டில் பாய்வது வழக்கமாக உள்ளது.
அதேபோல் திறந்த நிலை சாக்கடைகளிலும் கழிவு நீர் செல்வது தடுக்கப்பட்டு ரோட்டில் சென்று பாய்கிறது. இது சர்வ சாதாரணமாக நடக்கிறது. அதுவே மழை நாட்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம். பல இடங்களில் சாக்கடை நிரம்பி வீடுகளுக்குள் புகுந்து விடும். தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி ரோட்டிலும் மழை நீருடன் கழிவு நீர் கலந்து பாய்கிறது.
இந்த பிரச்னை குறுக்கு வீதிகள், சிறிய தெருக்கள் மட்டுமின்றி, பிரதான ரோடுகளிலும் கூட மிக சகஜமாக திருப்பூரில் ஏற்படுகிறது. ஓடைகளில் சென்று பாயும் நீரைப் போல் அதிக வேகத்தில் ரோட்டில் மழை நீரும் கழிவுநீரும் கலந்து பாடாய்ப் படுத்தி விடுகிறது.
நொய்யல் கரையில் இரு புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள ரோடுகளில் சேகரமாகும் மழை நீர் பல மீட்டர் துாரம் இரண்டடி உயரத்துக்கும் மேல் தேங்கி நின்று வாகனங்கள் செல்ல வழியின்றி அவதிப்பட வைத்தது.
அதேபோல் காலேஜ் ரோடு ரயில்வே பாலங்களின் கீழ் பகுதியிலும், கழிவுகளால் ஏற்பட்ட அடைப்பு மழை நீரை செல்ல விடாமல் தடுத்தது. பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கால்வாய்களிலும், ரோட்டிலும், நீர் வழிப்பாதைகளிலும் வீசுவது தவிர்க்கப்பட வேண்டும்.