/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் சந்தைகளில் காய்கறி ரூ.12 கோடிக்கு விற்பனை
/
உழவர் சந்தைகளில் காய்கறி ரூ.12 கோடிக்கு விற்பனை
ADDED : ஆக 06, 2025 12:25 AM
திருப்பூர்; திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தைகளில், கடந்த ஜூலை மாதத்தில், 12.03 கோடி ரூபாய் மதிப்புள்ள, 3,095 டன் காய்கறி விற்பனையாகியுள்ளது.
திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையத்தில் இயங்கும், தெற்கு உழவர் சந்தை, தமிழக அளவில் மிகப்பெரிய உழவர் சந்தையாக உள்ளது. தினமும், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து, நேரடியாக காய்கறி வாங்கி பயனடைகின்றனர். விவசாயிகளும், விளை பொருட்களை நேரடியாக விற்கின்றனர்.
கடந்த ஜூலை மாதம், திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், 8.54 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2,246 டன் அளவுக்கு காய்கறி விற்பனை நடந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 6,706 விவசாயிகள், தங்களது விளை பொருட்களை விற்பனை செய்துள்ளனர்; திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, ஒரு லட்சத்து, 32 ஆயிரத்து, 122 பேர் பயனடைந்துள்ளனர்.
திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில், 3.49 கோடி ரூபாய் மதிப்புள்ள, 849 டன் காய்கறி விற்பனை நடந்துள்ளது.
மொத்தம், 3,301 விவசாயிகள் விளை பொருட்களை விற்றுள்ளனர்; ஒரு லட்சத்து, 06 ஆயிரத்து, 345 பேர் பயனடைந்துள்ளனர்.
இரண்டு உழவர் சந்தைகளிலும், கடந்த மாதம் மட்டும், 12.03 கோடி ரூபாய் மதிப்புள்ள, 3,095 டன் எடையுள்ள காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், 10 ஆயிரத்து, 007 பேர் விற்றுள்ளனர்; இரண்டு லட்சத்து, 38 ஆயிரத்து, 467 பேர், காய்கறியை வாங்கி பயனடைந்துள்ளதாக, உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.