/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கயம் கிராஸ் ரோட்டில் வாகனங்கள் தத்தளிப்பு
/
காங்கயம் கிராஸ் ரோட்டில் வாகனங்கள் தத்தளிப்பு
ADDED : டிச 08, 2025 05:29 AM

திருப்பூர்: காங்கயம் கிராஸ் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூர் காங்கயம் கிராஸ் ரோட்டில், அதிக அளவு மீன் கடைகள், பிரியாணி கடைகள், பேக்கரிகள் இயங்கி வருகின்றன. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர், ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்துவதால், அப்பகுதியில் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.
குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில், மீன் விற்பனை களைகட்டுகிறது. மீன் கடைகள் முன் வாகனங்களை நிறுத்திவிட்டு, மீன் வாங்குகின்றனர்.
இத்தகைய ஆக்கிரமிப்பு காரணமாக, பகல் முழுவதும், காங்கயம் கிராஸ் ரோடு, சி.டி.சி., கார்னர் பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. கனரக வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்றுவர தாமதம் ஏற்படுகிறது.
பொதுமக்கள் அதிக அளவு பாதிக்கப்படுவதால், ரோட்டோரமாக வாகனங்களை நிறுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க, போக்குவரத்து போலீசார் திட்டமிட வேண்டும்.
கடைகள் முன் வாகனம் நிறுத்துவதை கட்டுப்படுத்தி, காங்கயம் கிராஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும்.

