/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; முக்கிய ரோட்டில் போக்குவரத்து நெரிசல்
/
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; முக்கிய ரோட்டில் போக்குவரத்து நெரிசல்
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; முக்கிய ரோட்டில் போக்குவரத்து நெரிசல்
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; முக்கிய ரோட்டில் போக்குவரத்து நெரிசல்
ADDED : மே 27, 2025 06:56 PM

உடுமலை : வெங்கடகிருஷ்ணா ரோட்டில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர்.
வளர்ந்து வரும் உடுமலையில், ராஜேந்திரா ரோடு, கல்பனா ரோடு, தளி ரோடு, பொள்ளாச்சி ரோடு, திருப்பூர் ரோடு போன்றவை பிரதான ரோடுகளாக உள்ளன.
உடுமலை பஸ் ஸ்டாண்ட் சந்திப்பில் இருந்து சந்தை அருகே பிரிந்து, நேதாஜி மைதான ரோட்டுடன், வெங்கடகிருஷ்ணா ரோடு இணைகிறது.
பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், இந்த ரோட்டிலேயே தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனைக்கு செல்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில், அதிக போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
நேதாஜி மைதான சுற்றுச்சுவரை ஒட்டியும், எதிர்புறத்திலும் வரிசையாக கடைகள் உள்ளன. இதனால், குறுகலான இடத்திலேயே அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியிலுள்ள கடைக்கு வரும் வாகன ஓட்டுநர்கள், வாகனங்களை தாறுமாறாக ரோட்டில் நிறுத்தி செல்கின்றனர். இதனால், காலை, மாலை நேரங்களில், அதிக போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இந்த ரோட்டில், பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் செல்ல முடியாமல் திணறும் நிலை ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
போக்குவரத்து போலீசார் அப்பகுதியில், பார்க்கிங் விதிமுறைகளை அமல்படுத்தி, நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.