/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய கபடி போட்டியில் வெற்றி; திருப்பூர் வீராங்கனைக்கு பாராட்டு
/
தேசிய கபடி போட்டியில் வெற்றி; திருப்பூர் வீராங்கனைக்கு பாராட்டு
தேசிய கபடி போட்டியில் வெற்றி; திருப்பூர் வீராங்கனைக்கு பாராட்டு
தேசிய கபடி போட்டியில் வெற்றி; திருப்பூர் வீராங்கனைக்கு பாராட்டு
ADDED : ஜூலை 12, 2025 12:52 AM

திருப்பூர்; தேசிய கபடி போட்டியில் பங்கேற்று, தமிழக அணி வெண்கலம் வென்றது. தமிழக அணியில் இடம் பெற்றிருந்த வீராங்கனைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 28 முதல், ஜூலை 1 வரை உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் பதினெட்டு வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஜூனியர் தேசிய கபடி போட்டி நடந்தது.
இதில் பங்கேற்ற தமிழக அணி, மூன்றாமிடம் பிடித்து வெண்கலம் வென்றது. தமிழக அணியில், திருப்பூர் மாவட்ட வீராங்கனை ஜன்யாஸ்ரீ இடம்பெற்று, விளையாடினார்.
ஜன்யாஸ்ரீ பங்கேற்ற நான்காவது தேசிய கபடி இதுவாகும். இதற்குமுன் இரண்டு முறை எஸ்.ஜி.எப்.ஐ., நடத்திய தேசிய போட்டிகளில், சப்-ஜூனியர் தேசிய போட்டியிலும் பங்கேற்றுள்ளார். இவரது பயிற்சியாளர் செந்தில்குமார்.
திருப்பூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த ஜன்யாஸ்ரீக்கு பாராட்டு விழா, மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட கபடி கழக சேர்மன் கொங்கு முருகேசன், மாநில கபடிக்கழக பொருளாளரும், மாவட்ட கபடி கழக செயலாளருமான ஜெயசித்ரா சண்முகம், சங்க தலைவர் ரோலக்ஸ் மனோகரன், பொருளாளர் கன்னிமார்ஸ் ஆறுச்சாமி, துணைத்தலைவர் ராமதாஸ், துணைச் சேர்மன் முருகானந்தம், துணைத் தலைவர் செந்துார் முத்துக்கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் தேவராஜ், கார்ஸ்மார்க்ஸ் ரவிச்சந்திரன். நடுவர் குழு சேர்மன் முத்துச்சாமி, நடுவர் குழு கன்வீனர் சேகர், டெக்னிக்கல் கமிட்டி ரங்கசாமி, நடுவர் மருதை உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.