/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில்களில் வித்யாரம்பம் கோலாகலம்
/
கோவில்களில் வித்யாரம்பம் கோலாகலம்
ADDED : அக் 02, 2025 11:31 PM

திருப்பூர்:திருப்பூர் சுற்றுப்பகுதி கோவில்களில் நேற்று, வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று விஜயதசமி கொண்டாடப்பட்டது. திருப்பூரிலுள்ள கோவில்களில், கற்றலில் அடியெடுத்துவைக்க உள்ள குழந்தைகளுக்கு, வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அறம் அறக்கட்டளை சார்பில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. 130 குழந்தைகள் பங்கேற்றனர். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தர்மன், ஆன்மிக சிந்தனையாளர் மதுசூதனன் பாராங்குசம், எழுத்தாளர் ஸ்ரீமதி ஆகியோர், துவக்கிவைத்தனர்.
திருமுருகன் பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவிலில் நடந்த விழாவில், 110 குழந்தைகள் பங்கேற்றனர். ஓவியர் ஜீவானந்தம், எழுத்தாளர்கள் கந்தசாமி, சத்தியபிரியன் ஆகியோர் பங்கேற்றனர்.
திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில், 1050 குழந்தைகள் பங்கேற்றனர். முன்னதாக, தர்மசாஸ்தாவுக்கு நடந்த சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.