/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழுதடைந்த நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகங்கள்
/
பழுதடைந்த நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகங்கள்
ADDED : அக் 02, 2025 11:31 PM

திருப்பூர்:திருப்பூர் அடுத்த கணபதிபாளையத்தில், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், கணபதிபாளையம், பெத்தாம்பாளையம் ஆகிய இரு வி.ஏ.ஓ., அலுவலகங்கள் உள்ளன. இரு வி.ஏ.ஓ.,க்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஏறத்தாழ 40 கிராமங்கள் உள்ளன.
கணபதிபாளையம் அலுவலகம், கடந்த 2002-ம் ஆண்டில், 6 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. அதன் பின் 50 ஆயிரம் ரூபாய் செலவில் பராமரிப்பு பணியும் மேற்ெகாள்ளப்பட்டது. தற்போது இதில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுகிறது.
பெத்தாம்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் அடிப்படை வசதிகள் இல்லாமல் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் இதன் அலுவலகமும் கணபதிபாளையம் அலுவலகத்தில் செயல்படுகிறது.
இங்கு வருவோர் அச்சத்துடன் தான் வந்து செல்ல வேண்டியுள்ளது. உடனடியாக பராமரிப்பு மேற்கொண்டு அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தவிர்க்க வேண்டும்.